“இதுதான் அஜித்தின் பாலிசி” - சீக்ரெட் பகிரும் தயாரிப்பாளர் தனஞ்செயன்

 “It's Ajith's policy” - Producer Dhananjeyan shares the secret

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. அதன் புரொமோசன் பணிகளில் எந்த விதத்திலும் அஜித் ஈடுபடவில்லையே? ஒரு திரைப்படத்தின் நடிகர் அதன் புரோமோசன் பணிகளில் ஈடுபடுவது என்பது சினிமாவைபொறுத்தவரை வசூலிலும் முக்கியப் பங்கு வகிக்கும் தானே? ஏன் அஜித் ஈடுபடுவதில்லை போன்ற கேள்விகளை தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களிடம் நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

“அஜித் கடைசியா ஒரு படத்திற்கு புரொமோசன் ஒன்றைச் செய்தார் என்றால் அது பில்லா படத்திற்கு மட்டும்தான். பில்லா பட புரொமோசனுக்காக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அஜித் வந்திருந்தார். அப்போது அவரை அங்குச் சந்தித்துப் பேசினேன்.அதற்குப் பிறகு கடந்த 15 வருடங்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அவரும் அதற்குப் பிறகு எந்தப் படத்தின் புரொமோசனிலும் கலந்து கொள்வதில்லை.

அதே சமயத்தில், புரொமோசன் குறித்த அவரது எண்ணமும் மாறிப்போனது.அவர் சொன்னதையே இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ‘ஒரு படம்தான் அதற்கே சிறந்த புரொமோசன்’அஜித்தைப் பொறுத்தவரை தன் திரைப்படம் வந்தாலேபோதும்.அதுவே அதற்கான ஓப்பனிங் வசூலைக் கொண்டு வந்துவிடும்.

மேலும், தன்னுடைய ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள்.நான் எதுவுமே பண்ணத் தேவையில்லை.என் ரசிகர்களே படத்தினை ஓட வைப்பார்கள்.படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்து டீசர், ட்ரைலர், பாடல் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். அதில், தான் தலையிடுவதில்லை என்பது அஜித்தின் பாலிசி.

அஜித் புரொமோசன் பண்ணவில்லை என்பதால் எல்லாம் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை.அஜித் சொன்னது போலவே அவர் படமே அதற்கு புரொமோசன் தான் போல.

ajith g dhananjayan Thunivu
இதையும் படியுங்கள்
Subscribe