Advertisment

ஸ்ரீதேவிக்கு அஜித், ஜோதிகாவுக்கு சிம்பு!

'காற்றின் மொழி'... ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துவரும் திரைப்படம். ஏற்கனவே 'மொழி' படத்தில் ஜோதிகாவின் பாத்திரம் மிகவும் பேசப்பட்டது, அனைவராலும் பாராட்டப்பட்டது. 'காற்றின் மொழி இசையா...' என்ற பாடலும் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இத்தகைய கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படம் குறித்து நல்ல எதிர்பார்ப்புகள் உருவாகியிருக்கின்றன.

Advertisment

ajith sridevi

str jo

இன்னொரு சர்ப்ரைஸாக இந்தப் படத்தில் சிம்பு, நடிகர் சிம்புவாகவே தோன்றுகிறார். ஹிந்தியில் வெற்றி பெற்ற 'தும்ஹாரி சூலு' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். அதன்படி ஆர்.ஜேவான ஜோதிகா பேட்டியெடுக்கும் பிரபலம் பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்க்லிஷ்' படத்தில் அஜித் ஒரு கேரக்டரில் நடித்தார். சிறிது நேரமே வந்தாலும் பெரிதும் ரசிக்கப்பட்டது அந்தப் பாத்திரம். அப்படியொரு பாத்திரமாக சிம்புவுக்கு இது அமையும் என்கிறார்கள் காற்றின் மொழி குழுவினர். சிம்புவும் ஜோதிகாவும் இணைந்து ஏற்கனவே மன்மதன், சரவணா ஆகிய படங்களில் நடித்துள்ளனர். 'மன்மதன்' படம் உருவான போது, தான் ஜோதிகாவின் தீவிர ரசிகன், அதனால்தான் அவருடன் நடிக்க விரும்பி மன்மதன் படத்துக்கு அழைத்தேன் என்று கூறினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்தப் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஹெச்.காஸிஃப், ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர். இவர், பாடகர் சித் ஸ்ரீராம் பாடி யூ-ட்யூபில் பிரபலமாக உள்ள 'போ...போ... என் இதயம் கரைந்து' என்ற பாடலை உருவாக்கியவர்.

Advertisment

jyothika vidyabalan surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe