Advertisment

"இதைசெய்ய இதுவே சரியான நேரம் விஜய் அண்ணா" - நடிகர் விஜய்க்கு இட்டிஸ் பிரஷாந்த் வேண்டுகோள்!

 xzcbx

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

Advertisment

மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகர் விஜய்யை கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தி இணையதள சினிமா விமர்சகர் இட்டிஸ் பிரஷாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "அன்புள்ள விஜய் அண்ணா. உங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு வீடியோ தேவை. அதில் தமிழ்நாடு மக்களை தடுப்பூசி போடுமாறு நீங்கள் கேட்டுக்கொண்டால் நன்றாக இருக்கும். உங்கள் 1 நிமிட வீடியோ லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஊக்குவிப்பதாக அமையும். இதைச் செய்ய இதுவே சரியான நேரம். நண்பர்களே இது அவரை சென்றடையும் வரை அதிகமாகபகிரவும்" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

its prashanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe