/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-9_14.jpg)
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்த ராம் வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இதனிடையே 'யானை' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அருண் விஜய், இயக்குநர் ஹரி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது அருண் விஜய்யிடம் புகை பிடிக்கும் காட்சி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "படத்தில் கதாபாத்திரத்தின் தேவைக்காக சில விஷயங்கள் பண்ண வேண்டியுள்ளது. இனி வரும் காலங்களில் நிச்சயமாக அது தவிர்க்கப்படும்" என அருண் விஜய் பதிலளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)