Advertisment

திடீர் ரெய்டு; புஷ்பா பட இயக்குநர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி

IT raids on offices of Sukumar and Mythri movie makers company

Advertisment

தெலுங்கு திரையுலகில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் தயாரிப்பு நிறுவனம் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்'. இந்நிறுவனம் இப்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2', ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படம்மற்றும் ராம்சரணின் 16வது படம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் வருமான வரித்துறையினர் இந்தாண்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் இரண்டாவது முறையாக இன்று சோதனை நடத்தினர். மேலும் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இதனால் ஹைதராபாத்தில் நடந்த புஷ்பா 2படப்பிடிப்பைஇன்று நிறுத்திவிட்டார் சுகுமார்.

இயக்குநர் சுகுமார் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரங்கஸ்தலம், புஷ்பா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதோடு எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் பல சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார் சுகுமார்.

director sukumar it raid tollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe