Advertisment

income tax raid viduthalai movie producer elred kumar house

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி தயாரிப்பாளராகஇருக்கும் எல்ரெட் குமார் சிம்பு நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', ஜீவா நடிப்பில் வெளியான 'கோ', கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'யாமிருக்க பயமேன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். இவர்பட தயாரிப்பை தாண்டி கல்குவாரி உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார்.

Advertisment

எல்ரெட் குமார் தனது வருமானம்தொடர்பாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரி துறையினருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட 250 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக நடந்த அதிரடி சோதனையில் எல்ரெட் குமாரின் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அத்துடன் எல்ரெட் குமாரின் வீட்டில் இருந்து ஏராளமான பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி இருவரும் நடிக்கும் 'விடுதலை' படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.