/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/797_3.jpg)
கிறிஸ் வேணுகோபால் மற்றும் திவ்யா ஸ்ரீதர் ஆகியோர் மலையாள சின்னத்திரையில் ‘பத்தரைமாற்று’ தொடரில் ஒன்றாக நடித்துள்ளனர். இத்தொடரின்போது இருவருக்கும் ஏற்பட்ட காதலால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருவாயூரிலுள்ள கிருஷ்ணர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கு முன்பு திவ்யா ஸ்ரீதருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். விவாகரத்தானதைத் தொடர்ந்து தற்போது கிறிஸ் வேணுகோபாலுடன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.
திவ்யா ஸ்ரீதரின் இரண்டாவது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில் திவ்யா ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஏன் இப்படி எதிர்மறை கருத்துகளை சொல்கிறார்கள் திருமணம் செய்வது தவறான விஷயமா? இது போன்ற எதிமறையான கருத்துகள் எதிர்பார்த்தது தான். உடலுறவுக்காக நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.
என் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தந்தையும், கணவர் என்று அழைக்க எனக்கு ஒரு அடையாளம் தேவை. உடலுறவு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். 60 வயதுடையவரை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கிறிஸ் வேணுகோபாலுக்கு 49 வயது, எனக்கு 40 வயது. நான் 1984-ல் பிறந்தேன். அவர் 1975-ல் பிறந்தார். வயதை காரணமாக காட்டி பேசுபவர்கள் பேசட்டும். ஆயிரம் குடங்களில் வாயை மூடிவிடலாம். ஆனால் ஒரு மனிதரின் வாயை அடைக்க முடியாது”என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/796_0.jpg)