IT dept records statements of Mohanlal

Advertisment

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். குண்டனூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மோகன்லாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் திரைப்படத்தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக மோகன்லால்நண்பரான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்வீட்டில்வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக தற்போது மோகன்லால் வீட்டில் நடத்தப்பட்டது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம், புலி முருகன் மற்றும் லூசிஃபர் உள்ளிட்ட படங்களைத்தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால், தற்போது லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' மற்றும் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தான் இயக்கும் முதல் படமான 'பரோஸ்' படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார்.