Advertisment

சோனு சூட்டிற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

sonu sood

கரோனா கால ஊரடங்கின் போது வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவர்கள் இந்தியா திரும்ப உதவியது, வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கியது, ஒரு கிராமத்தில் மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தது உள்ளிட்ட பல உதவிகளைச் செய்தவர் நடிகர் சோனு சூட். தற்போதும் சமூக வலைத்தளம் வாயிலாக உதவிகோருபவர்களுக்கு தன்னுடைய தொண்டு நிறுவனம் மூலம் இயன்ற உதவியைச் செய்துவருகிறார். சோனு சூட்டின் இந்தச் செயலை பலரும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சோனு சூட்டிற்குச் சொந்தமான ஆறு இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மும்பையில் உள்ள அவரது வீடு, சோனு சூட்டுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்ட லக்னோவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. சோனு சூட்டிற்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்றுவரும் இந்த வருமான வரித்துறை சோதனையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisment

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் சோனு சூட் இணையவுள்ளதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் அதை சோனு சூட் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

sonu sood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe