Advertisment

யுகபாரதி வரிகளில் கவனம் ஈர்க்கும் 'ஐஸ்வர்யா முருகன்' பட பாடல்

iswarya murugan movie third song released

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ரேணிகுண்டா’ படத்தைஇயக்கியதன் மூலம் திரையுலகைதிரும்பிப் பார்க்கவைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம், தற்போது ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தைஇயக்கிவருகிறார். இவர்இயக்கத்தில் கடைசியாக விஜய் சேதுபதிநடிப்பில் வெளியான ‘கருப்பன்’ படம் ரசிகர்களிடையேநல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண் பன்னீர்செல்வம், வித்யா, ஹரிஷ் லல்வானி, ஸ்ரீ சாய் சங்கீத் உள்ளிட்ட பல புதுமுக நடிகர்களைவைத்து ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தைஇயக்கிவருகிறார். இப்படத்தை மாஸ்டர் பீஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே. வினோத் ஆகியோர் தயாரிக்க, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். காதல் திருமணத்திற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்‘எங்கிருந்தோ கத்துதம்மாசெங்குருவி..’ என்ற படத்தின்மூன்றாவதுபாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி வரிகளில், கிராமிய பாடகர் முத்துசிற்பி குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களின்கவனத்தை ஈர்த்துவருகிறது.

Advertisment

yugabharathi iswarya murugan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe