/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/154_7.jpg)
தமிழ்ப்படம் 2 மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து தமிழ் சில படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு திரையுலகில் கால் பதிக்க உள்ளார். அதன்படி தெலுங்கில் வலிமை பட வில்லன் கார்த்திகேயாநடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தைபிரசாந்த் இயக்க யூ வி கிரியேஷன்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையே இயக்குநர் கோரி இயக்கத்தில் நிகில்நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் மூன்றாவதாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர் நடிக்கும் புதிய பதில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்தமற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)