Advertisment

ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாகும் தமிழப்படம் 2 ஹீரோயின்...

யூ-ட்யூபில் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா என்னும் ஆதி. பின்னர், சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். அதன்பின் சுந்தர்.சி தயாரிப்பில் மீசையை முறுக்கு என்னும் படத்தின் மூல நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அந்த படம் வெற்றியடைய இரண்டாவது முறையாகவும் இந்த கூட்டணி உருவாகி நட்பே துணை என்ற படத்தை எடுத்து அதிலும் வெற்றி கண்டது.

Advertisment

iswarya menon

இந்நிலையில் மூன்றாவது முறையாக ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் சுந்தர்.சி. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராணா என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது அதன்படி இப்படத்திற்கு ‘நான் சிரித்தால்’ என டைட்டில் வைத்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை இயக்குனர் ராணா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்ப்படம் 2வில் மிர்சி சிவாவிற்கு ஜோடியாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

ஏற்கனவே குறும்படங்களை இயக்கியுள்ள ராணா, மிகவும் பிரபலமான அவரது ‘கெக்க பெக்க’ குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனை பலவற்றை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக தெரிகிறது.

hiphop adhi iswarya menon naan sirithal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe