/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/137_32.jpg)
'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் பணிகள் நடந்து உருவாகியுள்ள படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.
இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இப்படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் தேதி படத்தின் ஆடியோ லான்ச் நடந்தது. தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான ‘அயலா அயலா...’ லிரிக் வீடியோ மற்றும் ட்ரைலர்சமீபத்தில் வெளியானது. பொங்கலை முன்னிட்டு நாளை 12 ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று மாலை படத்தின் மூன்றாவது பாடலான ‘மாஞ்சா நீ...’ லிரிக் வீடியோ வெளியானது.
இந்த நிலையில் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் ஃபைனான்சியர்கள், படம் தொடர்பாக ரூ.85 கோடி கடன் உள்ளதாகத்தெரிவித்து அதனைக் கொடுத்தால்தான் படம் வெளியாக அனுமதிப்போம் எனப் படக்குழுவிடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன், ரூ.85 கோடி கடனில் ரூ.25 கோடி தான் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பின்பு சிவகார்த்திகேயன் கடனை ஏற்க வேண்டும் அல்லது உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என ஃபைனான்சியர்கள் தெரிவித்துள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)