ஆசைக்கு இணங்க சொன்ன நடிகர்; பிரபல தமிழ் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

isha kopikar says about me too experience personal life

இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் இஷா கோபிகர். பிரபல பாலிவுட் நடிகையான இஷா கோபிகர் தமிழில் என் சுவாசக் காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பட வாய்ப்பிற்காகப் பிரபல நடிகர் தன்னை ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாக இவர் மீடூ புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், "என்னை ஒரு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தனர். அதன் பிறகு அப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் என்னைத் தனியாக வரும்படி அழைத்தார். படத்தின் தயாரிப்பாளரும் உங்களை அவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் நீங்கள் தனியாக அவருடன் செல்லுங்கள் என்றார். ஆனால் நான் திறமையை வைத்துத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதை அடமானம் வைத்துவிட்டு அவருடன் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கோபத்துடன் கூறினேன். இதனைத் தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் படத்திலிருந்து என்னை நீக்கி விட்டார். மேலும் திரைத்துறையிலிருந்து எனக்கு வரும் வாய்ப்புகளையும் கெடுத்துள்ளார். இதனால் சினிமாவில் எனது வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Bollywood me too
இதையும் படியுங்கள்
Subscribe