தமிழில் என் சுவாச காற்றே, விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஈஷா கோபிகர். இதன்பின் தென்னிந்திய படங்களில் வாய்பு குறைந்தவுடன் பாலிவுட்டில் நடிக்க தொடங்கிவிட்டார்.

Advertisment

isha kopikar

சமீபத்தில் இவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்கு 15 வயது இருக்கும்போது ஒரு பிரபல முன்னணி நடிகர் என்னிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

அந்த பேட்டியில் அவர் கூறியது. “பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது என்னை அழைத்த அந்த தயாரிப்பாளர், படத்தின் ஹீரோவைப் போய் பார்க்குமாறு கூறினார்.

அந்த நடிகர் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தார். நான் அந்த நடிகரை சந்தித்தபோது என்னுடன் யார் வந்திருப்பது என்று கேட்டார். நான் என்னுடைய கார் டிரைவருடன் வந்திருப்பதாகக் கூறினேன். மறுநாள் தனியாக வருமாறு அந்த நடிகர் என்னிடம் கூறினார். அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது. நான் மறுநாள் வேலையிருப்பதாகக் கூறி வெளியேறிவிட்டேன்.

Advertisment

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="37006f45-6628-49a5-9f02-91ee14f4dec8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300-02_10.jpg" />

பின்னர் அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து திறமைக்காக மட்டும் எனக்கு வாய்ப்பளியுங்கள் என்று கூறி, அந்த நடிகருடன் நடிக்க மறுத்துவிட்டேன். அப்போது எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்” என்றார்.

ஈஷா கோபிகரின் இந்த புகாரை அடுத்து மீடூ மூவ்மெண்டில் இருக்கும் பெண்கள் அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சின்மயியும் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “ 15 வயது பெண்ணை தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள நடிகர் அழைத்திருந்தால் அவர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளி . குழந்தைகள் மீது பாலியல் விருப்பம் கொள்பவர்கள் மீது போக்சோ சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் தள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.