கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.

isari ganesh

Advertisment

இந்நிலையில் சினிமாத்துறையில் பணியாற்றும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்கு பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். இதனையடுத்து சூர்யா, ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நிதியுதவி செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பல பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகின்றனர்.

இதனையடுத்து எல்.கே.ஜி, கோமாளி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஐசரி கணேஷ் தன்னுடைய வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஃபெப்சிக்கு 10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். நடிகர் சங்கத்தில் நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு உதவுமாறும் 600 அரிசி மூட்டை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்.