Advertisment

1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கிய ஐசரி கணேஷ்

Isari Ganesh gave a special welcome to 1500 people regards his daughter marriage

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கே கணேஷின் மகள் பிரீத்தா கணேஷ் திருமணம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. லஷ்வின் குமார் என்பவரை பிரீத்தா கணேஷ் நேற்று காலை திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

இந்த திருமணத்தில் அரசியல், சினிமா, ஊடகம், கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். இந்த திருமணத்தையொட்டி ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக மட்டும் நேற்று மாலை சிறப்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், சிறப்புக்குழந்தைகளின் நடனமும் இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் ஒவ்வொருவர்களுக்கும் பரிசு பொருட்களை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.

Advertisment

இது குறித்து பேசிய ஐசரி கணேஷ், “இவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது இந்த சிறந்த நாளில் நம் வேல்ஸ் குடும்பத்திற்கு நாம் பெறக்கூடிய மிக அழகான ஆசீர்வாதம். இந்த வரவேற்பு என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.அன்பு செலுத்துவது மட்டுமே உலகின் சிறந்த செயல் என்பதைஎனக்கு நினைவூட்டியது, ” என்றார்.

isari ganesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe