Advertisment

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த தயாரிப்பாளர்!

dddwdc

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். அந்த வகையில், கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளரும், வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் தனது மனைவி ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் பிரீத்தா கணேஷ் ஆகியோருடன் முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினார்.

Advertisment

isari ganesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe