Advertisment

ராஷ்மிக்காவை கரம் பிடிக்கிறாரா விஜய்தேவரகொண்டா?

08 (29)

தெலுங்கு திரையுலகில் உட்சபட்ச நடிகராக இருந்து வருபவர் விஜய்தேவர்கொண்டா. அதேநேரத்தில் இந்திய அளவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இவர்கள், இருவரும் காதலித்து வருவதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தன. இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அவர்களுடைய நிச்சயதார்த்தம் வெளியில் யாருக்கும் அறிவிப்பு செய்யப்படாமல் ரகசியமாக நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சமயத்தில், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகின்றன. 

Advertisment

இந்த  நிலையில் , சமீபத்தில் விமான நிலையத்தில் ராஷ்மிக்காவை சந்தித்த பாகைப்படக் கலைஞர் ஒருவர் அவருக்கு வாழ்த்துக்களைத்  தெரிவித்தார். இதற்குப் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்துவிட்டு ராஸ்மிகா சென்றுவிட்டார். இந்த நிலையில், வருகின்ற பிப்ரவரி 26ம் நாள் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக, ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் அரண்மனை ஹோட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாம். 

Advertisment

மேலும், இந்த திருமணத்திற்கு அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இந்த திருமணத்திற்குப் பின்பு ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் உட்பட அனைவரையும் அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், இந்த தகவல் அறிந்த பலரும் திரையுலகில் மீண்டும் ஒரு அழகான நட்சத்திர காதல் ஜோடி என வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

rashmika mandana vijay devarakonda
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe