இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. காமத்தை விரும்பும் பேய் செய்யும் சேட்டைகளை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும். கொளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா மற்றும் கருணாகரன் ஆகியோர் இந்த படத்தில் நடிந்திருந்தார்கள். படத்தின் காமெடிக்கு வலுசேர்க்கும் விதமாக மொட்டை ராஜேந்திரன் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது.

Advertisment

இயக்குநர் சந்தோஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஹீரோயின்களாக கரிஷ்மா மற்றும் அக்ரித்தி சிங் நடிக்கிறார்கள். படத்தின் அப்டேட் தகவலுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு தற்போது மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. 60 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த அந்த படத்தின் படப்பிடிப்புநாளையுடன் முடிவடைகின்றது. எனவே இந்த திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள்.