மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்பஹத்பாசில். தமிழில்வேலைக்காரன், சூப்பர்டீலக்ஸ்ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும்வித்தியாசமான கதை, கதாபாத்திரம் மற்றும் சிறப்பானநடிப்பால்ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவருகிறார். சமீபத்தில் இவர், தனதுமனைவியும்நடிகையுமான நஸ்ரியாநசிமோடுஇணைந்து 'சீயூசூன்' என்ற திரைப்படதத்தைதயாரித்து நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஐ போனில்எடுக்கப்பட்ட அந்த படம், அமேசான்பிரைமில்வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைபெற்றது.
பஹத்பாசில், சீயூசூன்படத்திற்குபிறகுஇருள் என்ற படத்தில்நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 20 ஆம் தேடி முடிவடைந்தது. அதை தொடர்ந்து படத்தின்போஸ்ட்ப்ரொடக்ஷன் பணிகள்நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிறகிறிஸ்துமஸ் பண்டிகையின்போது திரைக்குவரும் என்று தகவல்கள்தெரிவிக்கின்றன.
Here is the title look poster of #Irul ?@AJFilmCompanypic.twitter.com/tRIdEbDZqw
— Anto Joseph (@IamAntoJoseph) October 31, 2020
இந்தநிலையில் இருள் படத்தின்பர்ஸ்ட்லுக்போஸ்டர்வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு திரில்லர் படம் எனதகவல்கள்வந்தநிலையில், படத்தின்போஸ்டர்அதை உறுதி செய்வதுபோல் உள்ளது.அறிமுக இயக்குனர்நஜீப் யூசுப்இஸ்சுதீன்இப்படத்தை இயக்குகிறார். இவர் தும்பாட்உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.