irugapatru thanks note for fans support

Advertisment

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிஜமாகவே ஒரு நல்ல மருத்துவரின் கவுன்சிலிங்கை கேட்டுவிட்டு வந்தது போல இருந்ததாகவும், படம் நேர்மறையானஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல தம்பதிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.

திரையரங்கு வெற்றிக்குப் பிறகு நவம்பர் 6 முதல் பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிக்ஸில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆனது. ஓடிடியிலும் பலரது கவனத்தை பெற்று டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் இறுகப்பற்று தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பார்வையாளர்களின் ஆதரவிற்கு இறுகப்பற்று படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. இப்படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.