/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anurag-kashyap_0.jpg)
பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் மீது, சில தினங்களுக்கு முன்பு இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியான கல்கி கோச்லீன், அவருக்கு ஆதரவு அளித்துள்ளார். அனுராக் காஷ்யப்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அனுராக் காஷ்யப்பை விமர்சித்தவர்களை கடுமையாக சாடியுள்ளார் பிரபல நடிகர் இர்ஃபான் கானின் மகன் பாபில். அவர் வெளியிட்டுள்ள கடிதத்துடன் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அதில், “தலைதூக்கி நில்லுங்கள் அனுராக். நான் சொல்லப்போகும் இந்த விஷயத்தால் நீங்கள் அனைவரும் என்னை வெறுப்பீர்கள் என்று எனக்குதெரியும். ஆனால், ஒரு விஷயம் தவறாகபடும்போது அதற்காககுரல் கொடுக்க வேண்டும். அந்தபெண் ஏன் உண்மையைச் சொல்லியிருக்கக்கூடாது எனபலர் என்னிடம் கேட்கின்றனர். நான் எனது தீர்மானத்தை நம்புகிறேன். என் வார்த்தைகள் தவறென்றால் அதற்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “மீடூ போன்ற ஒரு விலைமதிக்க முடியாத இயக்கம் ஒருவருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பயன்படுத்தப்படுவது வெட்கக்கேடானது. அதுவும் மோசமான ஆணாதிக்கம் இருக்கும் துறையில் சமத்துவத்துக்கு ஊக்கம் தரும் ஒருவருக்கு எதிராக.
நாம் ஒரு விநோதமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் உண்மையை வெளிப்படுத்துவதை விட உருவாக்குவது சுலபம்.நாம் வளருவோம் என வேண்டுகிறேன். என் கவலை என்னவென்றால், மீடூ இயக்கம் மூலமாக பரப்பப்படும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளினால் அந்த இயக்கத்தின் நம்பகத்தன்மை கெடும். உண்மையிலேயே ஆதரவு தேவைப்படும் பெண்களுக்கு ஆதரவு கிடைக்காது. இது காயப்படுத்தும் விஷயம்" என்று தெரிவித்திருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)