Advertisment

இர்ஃபான் கான் மறைவு... ரசிகருக்கு வந்த உருக்கமான மெசேஜ்...

irrfan khan

Advertisment

கடந்த இரண்டு வரடங்களாகப் புற்று நோயால் அவதிப்பட்டு, போராடி வந்த நடிகர் இர்ஃபான் கான் ஏப்ரல் 28- ஆம் தேதி இரவு மும்பையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவையொட்டி திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் இன்பாக்ஸில் மெசேஜ் செய்த ரசிகருக்கு தானியங்கியின் உருக்கமான மெசேஜ் தற்போது வைரலாகி வருகிறது.

ரெஸ்ட் இன் பீஸ் லெஜண்ட் என்று இர்ஃபான் கான் இன்பாக்ஸில் ரசிகர் ஒருவர் மெசேஜ் அனுப்ப, அதற்கு தானியங்கி மூலம் வந்த பதிலில் ''என் வாழ்க்கையோடு நீங்கள் அறியாத பலவழிகளில் இணைந்து இருந்தமைக்கு நன்றி. என் வளங்கள் என்பது பொருளாதாரம் சார்ந்தவை அல்ல. உண்மையில் அது உங்களைப் போன்ற ரசிகர்களிடம் உள்ளது''.

irrfan khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe