ரஷ்யாவில் இருந்து 'கோப்ரா' பட அப்டேட் கொடுத்த இர்ஃபான் பதான்!

cobra

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், உலகம் முழுவதும் ஏற்பட்ட கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் பணிகள் பாதியில் முடங்கின. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து இயல்புநிலை திரும்பி வருவதால், படப்பிடிப்பை 'கோப்ரா' படக்குழு மீண்டும் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவரும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், தற்போது படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவில் எடுத்தபுகைப்படத்தைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளஇர்ஃபான் பதான், ரஷ்யாவில் படப்பிடிப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கோப்ரா படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால், எஞ்சியுள்ள காட்சிகளை முடித்துவிட்டு கோப்ரா படக்குழு விரைவில் இந்தியா திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கோப்ரா படத்தின் டீசர் வெளியாகி இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது விக்ரம் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

actor vikram cobra
இதையும் படியுங்கள்
Subscribe