simbu

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் விக்ரம் ஏழு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். இன்னும் பல கதாபாத்திரங்களில் நடிக்கவும் வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.

Advertisment

விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஏற்கனவே 'கோப்ரா' படத்தில் அவர் இசையமைத்த "தும்மி துள்ளல்" பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இர்ஃபான் பதான், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நேற்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தில் அவர் நடிக்கும் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் "அஸ்லான் எல்மாஸ்" என்னும் பிரெஞ்சு இன்டர்போல் அதிகாரியாக அவர் நடித்திருப்பதும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'கோப்ரா' படத்தின் டப்பிங் வேலைகளை, படக்குழுவிஜயதசமி அன்று தொடங்கியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, அடுத்தாண்டு இப்படம் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment