Skip to main content

“புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம்”- பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் தமிழில் ட்வீட்...

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், பத்துக்கும் மேற்பட்ட புது புது கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகவும், தமிழ் சினிமாவில் இதுவொரு சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.
 

irfan pathan

 

 

நேற்று மாலை ஆறு மணிக்கு அப்டேட்விட்ட படக்குழு, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் முன்னர் இந்திய கிரிக்கெட் டீமில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார்.

இந்நிலையில் இர்பான் பதான் ட்விட்டரில் தமிழில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும்  வணக்கம்,  நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி... நடிகர் விக்ரம் , இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குனர் அஜஹ்ஞானமுத்து உடன் ‘சீயான்58’ இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன்.  உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி மஜா பண்றோம்...” என்று தெரிவித்துள்ளார்.

‘விக்ரம் 58’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"சிறந்த கற்றல்" - ரஜினியை சந்தித்த இர்பான் பதான்

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

irfan pathan meets rajinikanth

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

 

இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

 

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமிதாப் பச்சன் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ள புகைப்படத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர், இர்பான் பதான் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "நம் நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார், ஆனால் இந்த கிரகத்தில் எளிமையான மனிதர். அவரை சந்தித்தது ஒரு சிறந்த கற்றல்" என குறிப்பிட்டுள்ளார். இவர் கிரிக்கெட்டை தாண்டி விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

"உங்கள் நடிப்பை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" - 'கோப்ரா' படம் குறித்து சுரேஷ் ரெய்னா ட்வீட்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

suresh raina tweet about vikram in cobra movie

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 'கோப்ரா' படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கோப்ரா பட ட்ரைலரை பகிர்ந்து, "இர்ஃபான் பதான் பிரதர் உங்கள் நடிப்பை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள். படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.