சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், பத்துக்கும் மேற்பட்ட புது புது கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகவும், தமிழ் சினிமாவில் இதுவொரு சாதனையாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

irfan pathan

நேற்று மாலை ஆறு மணிக்கு அப்டேட்விட்ட படக்குழு, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் முன்னர் இந்திய கிரிக்கெட் டீமில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார்.

Advertisment

இந்நிலையில் இர்பான் பதான் ட்விட்டரில் தமிழில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம், நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி... நடிகர் விக்ரம் , இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குனர் அஜஹ்ஞானமுத்து உடன் ‘சீயான்58’ இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி மஜா பண்றோம்...” என்று தெரிவித்துள்ளார்.

‘விக்ரம் 58’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment