Iravin Nizhal Kannethir Lyrical Video release

‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க , ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் அடுத்த பாடலானகண்ணெதிரே பாடலைபடக்குழு வெளியிட்டுள்ளது. பெண் குழந்தைக்கும், அப்பாவுக்கும்உள்ள தொடர்பை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்பாடலை நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இப்பாடலை நடிகர் பார்த்திபன் எழுதி,சர்தக் கல்யாணி, ஹிரால் விராடியாஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

Advertisment