sams

Advertisment

'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ்..

இந்நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ’இரண்டாம் குத்து’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்திருக்கும் சாம்ஸ், இனி இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன். இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாகத்தான் வருகிறதே, அந்த வயது இளைஞர்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்.

'A' படம் என்று தணிக்கைச் சான்றிதழுடன் வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன? என்று தான் இந்தப் படத்தில் நடித்தேன். ஆனால், இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தைக் காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி ‘இரண்டாம் குத்து’ போன்ற நேரடி அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து”. இவ்வாறு சாம்ஸ் தெரிவித்துள்ளார்.