சின்னத்திரையில் பிரபலமாக இருந்த ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பியூட்டி'. ஆனந்த சிவா இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா ஷா கதாநாயகியாக நடிக்க ஆதேஷ் பாலா, ஆனந்தன், சண்முகம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 'பியூட்டி' படத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இரண்டு பாடல்கள் எழுதியுள்ளதாகப் படத்தின் இயக்குநர் ஆனந்த சிவா தெரிவித்துள்ளார். அவர் எழுதிய காதல்பாடல் நல்ல வரவேற்பை பெரும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் இறையன்புபல பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.'சிம்மாசன சீக்ரெட்', 'நேரம்', 'மூளைக்குள் சுற்றுலா' உள்ளிட்ட பல புத்தகங்கள்வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.