Advertisment

சல்மான் கான் - சஞ்சய் லீலா பன்சாலி கூட்டணியில் ‘இன்ஷா அல்லா’ ட்ராப்பா?

சல்மான் கான் - சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு சவாரியா படத்திற்கு பிறகு தற்போது ஒன்றாக இணைந்து இன்ஷா அல்லா படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஈகை திருநாளில் வெளியாக இருப்பதாக முதலில் இப்படக்குழு அறிவித்திருந்தது. இதில் சல்மான் கான் உடன் அலியா பட் முதன் முறையாக ஜோடியாக நடிப்பதாக இருந்தது.

Advertisment

salman khan

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாதி குறித்து ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. மேலும் சில எழுத்து வேலைகள் தேவைப்படுவதால் இப்படம் அறிவித்த தேதியில் வெளியாகாது என்று பன்சாலி பிக்சர்ஸ் அறிவித்தது.

Advertisment

"சஞ்சய் லீலா பன்சாலி உடனனான திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் உங்கள் அனைவரையும் 2020 ஈகைத் திருநாளில் சந்திப்பேன். இன்ஷா அல்லா" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சல்மான். இவர்கள் இருவரும் படம் தாமதமாக வெளியாகும் என்று சொன்னாலும் சமூக வலைதளத்தில் படம் ட்ராப் என்று பேசி வருகின்றனர்.

இந்த வருடம் டிசம்பர் மாதம் 'தபாங் 3' வெளியாகவுள்ளது. 'ஏக் தா டைகர்' படத்தின் மூன்றாவது பாகத்திலும் சல்மான் நடிக்கவுள்ளார். மேலும் சூரஜ் பர்ஜாத்யா படத்திலும் சல்மான் நடிக்கவுள்ளார். இதோடு 'கிக்' படத்தின் இரண்டாம் பாகமும், 'வெடரன்' என்கிற தென் கொரிய திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் சல்மானே நாயகன்.

இதில் எந்தப் படம் 'இன்ஷால்லா' தேதியில் வெளியாகும் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

Bollywood eid festival sanjay leela banshali Salman Khan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe