கவின் படத்தில் சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடலின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

sivakarthikeyan

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புனா என்னானு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘லிஃப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார் என்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்த நிலையில், படக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் பாடியுள்ள 'இன்னாமயிலு' என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

‘லிஃப்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடியுள்ளது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவின், "என் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிவகார்த்திகேயன் அளித்த ஆதரவுக்கு, என்னால் போதுமான அளவிற்கு நன்றி சொல்ல முடியாது. அனைத்திற்கும் நன்றி அண்ணா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor sivakarthikeyan kavin
இதையும் படியுங்கள்
Subscribe