Skip to main content

பட வாய்ப்புக்காக நடிகை இனியா செய்தது 

Published on 02/05/2018 | Edited on 03/05/2018

மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை இனியா தமிழில் 'வாகை சூடவா' படம் மூலம் பிரபலமாகி பின்னர் 'மவுன குரு', 'அம்மாவின் கைப்பேசி', 'யுத்தம்செய்', 'மாசானி', 'வைகை எக்ஸ்பிரஸ்' உள்பட பல படங்களில் நடித்தார். இதன் பின் இவர் நடித்த படங்கள் தமிழில் சரியாக போகாததாலும், கவர்ச்சியாக நடிக்க மறுப்பதாலும், இயக்குனர்கள் இவரை ஒதுக்குவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இவர்  கைவசம் தற்போது 'பொட்டு' என்ற ஒரே ஒரு தமிழ் படம் வைத்துள்ளார். பரத் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தமிழில் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க இனியா கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். மேலும் முன்பு ஒல்லியாக காணப்பட்ட அவர் தற்போது கொஞ்சம் உடல் பருமனாக மாறிய அவரது கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதன் மூலம் இயக்குனர்கள் பார்வை அவர் மீது சீக்கிரம் பட ஆரம்பித்து மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நபிக்கையில் உள்ளார் இனியா.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நானும் அடுத்த லெவலுக்கு போக இது உதவியாக இருக்கும் - இனியா

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா. அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது. தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் இனியா தன் அடுத்த படம் குறித்து பேசியபோது...

 

iniya

 

தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் 'காபி' என்ற படத்தில் நடிக்கிறேன். அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன். என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இது இருக்கும். தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது.

 

kanchana

 

மலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குனர் இயக்கத்தில்  பிருதிவிராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் "தாக்கோல்" என்ற புதிய படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு பேமிலி சப்ஜெக்ட். கோவா கேரளாவில் ஷூட்டிங் நடக்குது. இன்னொரு சந்தோஷம் என்னன்னா, கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரோட "துரோணா" ங்கிற படத்துல அவருக்கு ஜோடியா  நடிச்சிட்டிருக்கேன். கல்வியை மையப்படுத்தி உருவாகிற சப்ஜெக்ட். எனக்கு ரொம்ப நல்ல பேரை கொடுக்கும். தமிழில் தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி. அது 'காபி' படத்தின் மூலம் சரியாயிடும். மலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச "பரோல்" ங்கிற படத்துக்காகவும் "பெண்களில்லா" ங்கிற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதாநாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு. பரோல் படத்துக்கு பிரேம் நசீர் விருதும் "பெண்களில்லா" படத்துக்கு டி.வி சந்திரன் விருதும் கிடைச்சது. 2018 எனக்கு ரொம்பவும் சிறப்பா இருந்திச்சி. 2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன்" என்றார்.

 

Next Story

புற்று நோயாளிகளுக்காக நடிகை இனியா செய்தது... 

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
iniya


'வாகை சூடவா' படத்திற்கு பிறகு அதிகம் தமிழ் படங்களில் தலை காட்டாமல் ஒதுங்கியே இருந்த நடிகை இனியா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பின் வெளிவர இருக்கும் படம் 'பொட்டு'. இயக்குனர் வடிவுடையான் இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இனியா அடுத்ததாக இசை ஆல்பம் ஒன்றை வெளியிடவிருக்கிறார். 'மியா' என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக “மியா” என்ற பெயரில் இனியா தயாரித்திருக்கிறார். ஒரு பெண் பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும்.விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். அந்த லட்சியத்தை அடைய அவள் போராடுகிறாள். எவ்வளவோ தடைக்கற்கள் வந்தாலும் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போராடுகிறாள். அந்த முயற்சி எப்படி வெற்றியாகிறது என்பதே 'மியா' ஆல்பம். மேலும் இந்த ஆல்பத்தை குறித்து இனியா பேசியபோது.... 

 

"இந்த மியா வீடியோ ஆல்பம் எனது முதல் முயற்சி. இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளேன். இந்த வீடியோ ஆல்பத்தை பார்த்து பாராட்டிய திரு நவீன்பிரபாகர் திரு ரியாஸ், திரு கபாலிபாபு மூவரும் பியாண்ட்பிரேம்ஸ் நிறுவனம் மூலம் இந்த வீடியோ ஆல்பத்தை பிரமாதமாக வெளியிடுகிறார்கள். இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.மேலும் இதை போல இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம். இந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் 'மியா' வை காணிக்கையாக்குகிறேன்" என்றார்.