Information about the OTT release of 'Vikram'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூலும்உலகம் முழுவதும் ரூ.400 கோடியையும்நெருங்கியுள்ளது. கமல் படங்களிலே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'விக்ரம்' படம் பெற்றுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி 'விக்ரம்' படம் வருகிற ஜூலை 8-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment