/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-10_5.jpg)
'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டான்'. 'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' வெளியிட்டுள்ள இப்படத்திற்கு இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் 'டான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஜூன் 10-ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், ரவிக்குமார் இயக்கும் 'அயலான்' மற்றும் பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்கே 20' படத்தில் நடிக்கிறார். அடுத்து கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)