Advertisment

அரபிக் குத்து; விஜய்யின் செயலை பாராட்டிய இந்து மக்கள் கட்சி!

indu makkal Party praises Vijay

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்'பீஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலில்விஜய்யின்ஸ்டைலானகாஸ்டியுமும் அவரது லுக்கும்பலரையும் கவர்ந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகர் விஜய்யை இந்து மக்கள் கட்சி தலைவர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " பீஸ்ட் படத்தில் ஜோசப் விஜய் சிலுவை அணிந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர் தனது மத அடையாத்தை தைரியமாக வெளிப்படுத்துகிறார். அதில் என்ன தவறு இந்து மக்கள் கட்சி இதை வரவேற்கிறது. இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. எனினும்தேவையற்ற பிரச்சாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்கள் விஜய் கழுத்தில் இருப்பது சிலுவை இல்லை, கப்பலின் நங்கூரம் என சமூக வலைத்தளங்களில் பதிலளித்து வருகின்றனர்.

Advertisment

Arjun Sampath actor vijay hindu makkal katchi Beast
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe