Published on 09/11/2022 | Edited on 09/11/2022

ஜீ5 நிறுவனம் சமீபத்தில் தமிழ் ஒரிஜினல் சீரீஸ் 5678 என்ற தொடரை வெளியிடவுள்ளது. ஏ.எல்.அழகப்பன் ஹிதேஷ் தாக்கூர் தயாரித்த இந்தத் தொடர் வருகிற 18ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் விஜய் பேசுகையில், “இப்படம் ஓர் ஒருங்கிணைந்த தயாரிப்பாகும். தென்னிந்தியாவில் நடனத்தைக் கருப்பொருளாகக் கொண்ட படங்கள்/நிகழ்ச்சிகள் அதிகமாக வெளிவரவில்லை. அதனடிப்படையில் உதித்த புதிய யோசனைதான் இந்த முயற்சி. ‘5678’ இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்வதோடு அவர்களின் இதயத்தில் நீங்காத இடம் பெறும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.