/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_1544687329__rend_16_9.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தன் கடைசி படமாக உருவாகும் படம் இந்தியன் 2. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படம் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை எதிர்க்கும் படமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இம்மாதம் டிசம்பரில் தொடங்க, அரங்கு அமைக்கும் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதனை கலை இயக்குநர் முத்துராஜ் கவனித்து வந்தார். இந்த நிலையில் இப்பணிகள் இன்னும் முடிவு பெறாத காரணத்தால் வரும் ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழு தள்ளிவைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மார்கழி மாதம் என்பதாலும் படப்பிடிப்பை தொடங்க வேண்டாம் என்று படக்குழு முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வால் களரி, வர்மக்கலையை கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)