Advertisment

"டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்" - திரைப் பிரபலங்களுடன் போட்டி போடும் கிறிஸ் கெயில்

indian popular celebrities and international retired cricketers joins together for super 10

Advertisment

பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும், சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு, கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் டிசம்பர் 2022 இல் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லீக் போட்டிகளில் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சார்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர்.

இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறுகையில்.., “உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி ‘டி10’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்" என பேசினார்.

Advertisment

மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில், “சூப்பர் டி10 லீக் கிரிக்கெட் என்பது, திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும், கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும், இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்.

இப்போட்டிகள் குறித்து, சூப்பர் 10 கிரிக்கெட்டின் நிறுவனர் மற்றும் இயக்குநரான தினேஷ் குமார் கூறுகையில், “நாங்கள் இந்த ‘கிரிக்கெட்டைன்மென்ட்’ பொழுதுபோக்கு கான்செப்ட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். இது முதல் பதிப்பாகும், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த போட்டிகள் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்கை வழங்க உறுதியளித்துள்ளோம். கிரிக்கெட் மீது உலகளாவிய அளவில் ஆர்வத்தை வலுப்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் துறையில் மிகப்பெரிய ஆளுமைகளை இந்த போட்டிகளில் கொண்டுவரவுள்ளோம். உலகளவில் அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஒரு அற்புதமான தொடர் விளையாட்டு போட்டிகளை வழங்க ஆவலாக உள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

kicha sudeep chris gayle
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe