Skip to main content

"இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை" - கவிஞர் வைரமுத்து ட்வீட்

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

Indian lyricist vairamuthu tweet about hijab issuse

 

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் மறுத்து தெரிவித்த விவகாரம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி ‘அல்லாஹு அக்பர்’  என கோஷமிடுவது, சிவமொக்காவில் கல்லூரி ஒன்றில் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது. ஹிஜாப் அணிந்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

ad

 

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்," கல்வியின் நோக்கங்களுள் ஒன்று பிரிந்துகிடக்கும் சமூகத்தை ஒருகூரையின் கீழ் ஒன்றுபடுத்துவது; ஒன்றுபட்ட சமூகத்தை இரண்டுபடுத்துவது அல்ல ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம் இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை, ஒடுக்க வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்