Skip to main content

"எடுத்தது கண்டார் இற்றது  கேட்டார்" - முதல்வரை பாராட்டிய வைரமுத்து

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

indian lyricist vairamuthu praised tn cm stalin

 

தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 7 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி. கடந்த 3 ஆம் தேதி அந்த சட்ட மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியிருந்தார். ஆளுநரின் இந்த செயல்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 

 

இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வகை செய்யும் மசோதா நேற்று (8.2.2022)  சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு கோரிய மசோதாவை மீண்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பலரும்  பாராட்டுக்கள் தெரிவித்தனர். 

 

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து முதல்வர்  ஸ்டாலினை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நீட்தேர்வு மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்குட்பட்டு முறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் "எடுத்தது கண்டார் இற்றது  கேட்டார்" என்று விரைந்து வினைப்படுகிறார். முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். நல்லது வாழ்க, நலமே சூழ்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்