/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1165.jpg)
செங்கடல்,மாடத்திபோன்ற திரைப்படங்களைதொடர்ந்துஇயக்குநர்லீனா மணிமேகலை 'காளி' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போதுசர்ச்சையைகிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமானகாளி வேடம் அணிந்த பெண் வாயில்சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடிகொடியைபிடித்தவாறு இருக்கிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் லீனா மணிமேகலை இந்து மதத்தை அவமதிப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீதுஉத்திரபிரதேசம்மற்றும் டெல்லிபோலீசார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பன்முககலாசாரத்தைகொண்டாடும் வகையில்கனடாவில் 'ரிதம்ஸ்ஆஃப் கனடா' என்ற திருவிழாவில் காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் மத உணர்வை அவமதித்ததாக, இந்துதலைவர்களிடம் இருந்து தங்களுக்குபுகார் வந்ததாக கூறி கனடாவிற்கானஇந்தியதூதரகம் காளி படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அதில் படம் தொடர்பான அனைத்து விஷங்களையும் திரும்பபெற வேண்டும்என்று வலியுறுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)