ADVERTISEMENT

ஹாட் ட்ரிக்; கிராமி விருது வாங்கிய இந்திய இசையமைப்பாளர்

12:47 PM Feb 06, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 'கிராமி விருது' இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்துள்ளது. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், மூன்றாவது முறையாக கிராமி விருதை வாங்கியுள்ளார். 'டிவைன் டைட்ஸ்' ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பம் (Best Immersive Audio Album) என்ற பிரிவில் கிராமி விருது வென்றுள்ளார். இந்த விருதினை தி போலீஸ் என்ற பிரிட்டிஷ் ராக் இசைக் குழுவைச் சேர்ந்த ஸ்டூவர்ட் கோப்லேண்ட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரிக்கி கேஜ், "இந்த விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ரிக்கி கேஜ், இதற்கு முன்னதாக 2015 மற்றும் 2022ல் சிறந்த புதிய ஆல்பம் (Best New Age Album category) என்ற பிரிவில் கிராமி விருது வாங்கியுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT