Advertisment

இந்தியன் 2 ; படக்குழு செய்த அதிரடி மாற்றம்

indian 2 yrimmed yo 12 minutes

Advertisment

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2 படம், கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமரசனங்களே பெற்று வந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து படத்தின் திரைக்கதை, கமல்ஹாசனின் மேக் அப் குறித்து ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை வைத்து வந்தனர். குறிப்பாக, இரண்டாம் பாதியில் மிக நீளமாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதனால், இந்தியன் 2 படத்தில் 15 நிமிடக் காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

indian 2 yrimmed yo 12 minutes

Advertisment

இந்த நிலையில் படத்தில் கிட்டதட்ட 12 நிமிட காட்சிகளை குறைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

director Shankar ACTOR KAMAL HASSHAN indian 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe