Advertisment

தயாரான சேனாதிபதி - வேகமெடுக்கும் இந்தியன் 2

indian 2 update

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அ. வினோத் இயக்கும் புதிய படம், மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இதில் மணிரத்னம் பட பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்த படத்தின் டைட்டில் டீசர் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் மகேஷ் நாராயணன் படம் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisment

இதனிடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் நடப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் டப்பிங் பணிகளை தொடங்கினார் கமல்.

Advertisment

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட நாள் கழித்து அப்டேட் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே இந்தியன் 2 படம், இன்னொரு பாகமாக இந்தியன் 3 என வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் உலா வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

indian 2 director Shankar ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe