
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரு வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த வாரம் ஆர்.சி 15 படப்பிடிப்பையும் ஷங்கர் படமாக்கி வருகிறார்.
கமல்ஹாசன், இந்தியன் 2 படப்பிடிப்பில் அண்மையில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ரயிலில் வரும் ஒரு சண்டைக்காட்சியை படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன், துணை நடிகை அஸ்வினியின் குழந்தையை கையில் ஏந்தி கொஞ்சியுள்ளார். இது தொடர்பான ஒரு சிறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.