indian 2

Advertisment

நடிகர் ரஜினிகாந்த நடித்த '2.0' படத்தைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன்நடித்தும் வரும் படம் 'இந்தியன் 2'.

இந்தப் படம் ஆரம்பத்ததிலிருந்து ஏதாவது தடை ஏற்பட்டு ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இடையேஷூட்டிங் நடைபெற்று, பின்னர் இடைவெளி அதன்பின் ஷூட்டிங். இப்படித்தான் 'இந்தியான் 2' பட ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

அண்மையில் சென்னையிலுள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது, திடீரென ராட்சத கிரேன் விழுந்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர், 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Advertisment

இதன்பின்னர், இது மிகப்பெரும் சர்ச்சையைத் திரையுலகில் உண்டாக்கியது. இது தொடர்பான விசாரணை இன்னும் முடிவு பெறவில்லை. இந்த விபத்தினால் 'லைகா' நிறுவனம் - நடிகர் கமல் இருவருக்கும் அறிக்கைபோர் ஏற்பட்டது.

இதனையடுத்து, கரோனா பரவல் காரணமாக சினிமா ஷூட்டிங் கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் பொருளாதார இழப்பை 'லைகா' நிறுவனம் சந்தித்திருப்பதாகவும், 'இந்தியன் 2' படத்தைக் கைவிடப்போவதாகவும் கடந்த வாரம் சொல்லப்பட்டது.

இதனிடையே தமிழக அரசு எடிட்டிங், டப்பிங் போன்ற பணிகள் செய்ய அனுமதி வழங்கியதை அடுத்து 'இந்தியன் 2' படத்தின் எடிட்டிங் இரண்டு இடங்களில் நடைபெற்று வருவதால் 'இந்தியன் 2' படம் கைவிடப்படவில்லை என்று நம்பிக்கை தருகிறது. மேலும், லாக்டவுன் முடிந்தவுடன் ஷூட்டிங்கை 'பின்னி மில்'லில் வைக்க படக்குழு திட்டமிட்டு, அதற்கான முதற்கட்ட பணிகளில் இறங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.