/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ddf_0_0.jpg)
உலகநாயகன் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தலில் கமல் பிசியாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் முடிந்தவுடன் 'இந்தியன் 2' படத்தை ஒரே ஷெடியூலில் முடித்துக் கொடுத்துவிட கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)