Advertisment

இந்தியன் 2 படத்திற்கு என்னதான் ஆச்சு...? படப்பிடிப்பு நடக்குமா...நடக்காதா....?

தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தன் கடைசி படமாக உருவாகும் படம் 'இந்தியன் 2'. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

Advertisment

indian 2

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டிட்டியிடுவதால் இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பிரச்சாரங்கள் அனைத்தும் ஓய்ந்து நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால் கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

alt="ka" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0b83d7f4-d2e2-421c-9aa3-61340e64c01b" height="204" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kanchana%203%20336x150%20resize_8.jpg" width="458" />

இதற்கிடையே லைகா புரொடக்‌ஷன்ஸ் 'இந்தியன் 2' தயாரிப்பில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளதாகவும், இதனால் ஷங்கர் வேறு தயாரிப்பு நிறுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் புதிய தகவல் ஒன்றும் பரவி வருகிறது. மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஜூன், ஜூலையில் தொடங்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு நடக்குமா நடக்காத என குழப்பமும் நிலவி வருகிறது.

indian 2 kamal shankar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe